தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தங்க மயில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது காந்தாரா அணிக்குப் பெருமையான தருணம்: நடிகரும் திரைப்பட இயக்குநருமான ரிஷப் ஷெட்டி
கோவாவில் நடைபெற்று வரும் 54-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குநரும், , நடிகருமான ரிஷப் ஷெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். துடிப்பான மற்றும் இயங்குதிறன் உள்ள கன்னடத் திரைப்படத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பரவலாகக் கொண்டாடப்படுவது அவரது திரைப்படமான காந்தாரா. இதில் அவர் இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இந்த ஆண்டு 54-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்குப் போட்டியிடும் 15 சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்த மூன்று இந்தியப் படங்களில் காந்தாராவும் ஒன்றாகும்.
150 நிமிடங்கள் ஓடும் மிகச் சிறந்த கன்னட படமான காந்தாரா , கடந்த ஆண்டு வெளியானதில் இருந்து பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே சிக்கலான மற்றும் துடிப்பான மோதலை நடனம் மற்றும் உணர்ச்சி என்ற கற்பனை ஊடகத்தின் மூலம் சித்தரிப்பதால், கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளுக்கு காந்தாரா மனக்கிளர்ச்சியைத் தருகிறது.
"பாரதத்தின் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதை என்பதால் பார்வையாளர்கள் காந்தாராவுடன் இணைந்தனர்" என்று ஷெட்டி கூறினார். "பார்வையாளர்கள் இப்படத்தை இன்று இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தனர், உண்மையிலேயே அதைத் தங்கள் சொந்தமாக்கினர்," என்று அவர் மேலும் கூறினார்.
பாரம்பரிய கோலா நடனத்திற்கும் அதை நிகழ்த்தும் சமூகத்திற்கும் காந்தாரா புதிய வெளிப்பாட்டைக் கொடுத்தது. தனது படம் வெளியான நீண்ட காலத்திற்குப் பிறகு சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ரிஷப் கூறினார். "நான் இந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன், நான் இந்தச் சடங்கை நம்புகிறேன், நான் இந்தக் கடவுளை வணங்குகிறேன். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொண்டோம், கலாச்சாரம் அல்லது சமூகத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம், "என்று அவர் விவரித்தார்.
காந்தாராவின் வெற்றிக்கு நம்பிக்கையே காரணம் என்று கூறிய ஷெட்டி, ஒருவர் தங்களையும் அவர்கள் செய்யும் வேலையையும் நம்ப வேண்டும், அப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே நல்ல வேலையைச் செய்ய முடியும் என்று கூறினார். வேலைக்காக வேலை செய்ய வேண்டுமே தவிர வெற்றியைத் துரத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் இன்று உள்ளடக்கம் உண்மையிலேயே உலகளாவியதாகி விட்டது என்று அவர் தெரிவித்தார். "தற்போது, ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது- மொழித் தடைகளைத் தாண்டி நல்ல உள்ளடக்கம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது" என்று ஷெட்டி கூறினார்.
ஐ.எஃப்.எஃப்.ஐ உடனான தனது தொடர்பு குறித்து பேசிய ரிஷப் ஷெட்டி, இந்தத் திரைப்பட விழாவில் தாம் பங்கேற்பது இது இரண்டாவது முறை என்றார். திரைப்பட விழாக்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஒரு இடம் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். திரைப்பட விழாக்களைப் பாராட்டிய அவர், சிறிய திரைப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்க இந்தத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இயக்கம், எழுத்து, நடிப்பு ஆகியவற்றுக்கு இடையே உங்கள் உண்மையான காதல் என்ன என்ற கேள்விக்கு, "இயக்கம் தான் எனது முதல் காதல்." "நான் வாழ்க்கை அனுபவங்களை நம்புகிறேன், நான் மக்களுடன் இணைந்திருக்கிறேன், அதை எனது படங்களில் கொண்டு வர முயற்சிக்கிறேன்" என்று ஷெட்டி கூறினார்.
***
ANU/SMB/PKV/RR/KPG
(रिलीज़ आईडी: 1980424)
आगंतुक पटल : 154