தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலகளாவிய சினிமாவை வளப்படுத்தும் இணையற்ற உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத் திறன் இந்தியாவிடம் உள்ளது: நடுவர் தலைவர் சேகர் கபூர்

இந்திய சர்வதேசத் திரைப்பட விழா போன்றவை இந்தியத் திரைப்படங்கள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன: ஹெலன் லீக்

நாளை நடைபெறும் நிறைவு விழாவில் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது அறிவிக்கப்படும்

Posted On: 27 NOV 2023 5:02PM by PIB Chennai

கோவாவில் நடைபெற்று வரும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பது குறித்த தங்கள் ஆழமான அனுபவங்களையும் எண்ணங்களையும் சர்வதேச நடுவர் குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், நடுவர் குழு உறுப்பினர்கள் 'சர்வதேசப் போட்டி' மற்றும் இந்தப் பிரிவில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டிய விருதுகள் குறித்து விவாதித்தனர்.

 

சர்வதேச நடுவர் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதும், மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதைகளின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுப்பதும் தங்களுக்கு ஒரு சிறந்த தனிப்பட்ட அனுபவம் என்று நடுவர் குழுவினர்  ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர். இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்கப்பட்டதிலிருந்து மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்றும், பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தேர்வுகளின் பன்முகத்தன்மை காரணமாக இது ஏற்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

நடுவர் தலைவராக இருக்கும் பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் கூறுகையில், உலகளாவிய சினிமாவை வளப்படுத்தும் இந்தியாவின் இணையற்ற உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை  எடுத்துரைத்தார். "இந்தியா உலகின் மிகப்பெரிய உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப தளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா போன்றவை  இந்தியாவின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள உலகின் பிற பகுதிகளுக்கு உதவுகின்றன" என்று திரு சேகர் கபூர் மேலும் கூறினார். இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், "ஒரு படைப்பில் இறுதி அதிகாரம் என்று எதுவும் இல்லை" என்று கூறினார்.

 

 

"திரைப்படச் சந்தை போன்ற முன்முயற்சிகள் கூட்டுத் திட்டங்களை உருவாக்குவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என்று ஜெரோம் பைலார்ட் தெரிவித்தார். நாளைய படைப்பு மனங்கள் என்ற முன்முயற்சியைப் பாராட்டிய அவர், திரைப்படத் தயாரிப்பில் இளம் திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு அற்புதமான முன்முயற்சி இது என்று கூறினார்.

 

ஜெரோமின் உணர்வுகளை பிரதிபலித்த கேத்தரின் டஸ்ஸார்ட், போட்டியில் உள்ள ஏராளமான படங்களையும், விநியோகஸ்தர்களையும் தயாரிப்பாளர்களையும் இணைப்பதில் திரைப்படச் சந்தையின் முக்கியப்  பங்களிப்பையும் பாராட்டினார். "இணை தயாரிப்புக்கான புதிய திட்டங்களைக் கண்டுபிடிக்க வரும் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் கூறினார்,

 

வெவ்வேறு திரைப்படத் துறைகளை ஒன்றிணைப்பதில் விழாவின் பங்கை ஹெலன் லீக் எடுத்துரைத்தார். இந்த விழாவின் விரிவான தளத்தின் மூலம் இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அங்கீகாரத்தை எடுத்துரைத்த ஹெலன், "பல்வேறு திரைப்படத் துறைகளின் கூட்டாண்மை .எஃப்.எஃப். மூலம் மிகவும் இணைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார், இந்த விழாவின் மூலம் உலகம் முழுவதும் இந்தியத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருவதை ஒப்புக்கொண்டார்.

 

விழாவின் விருந்தோம்பலையும்  அரவணைப்பையும் பெருந்தன்மையையும் நடுவர் மன்றம் வெகுவாகப் பாராட்டியதுடன், அவர்களின் அனுபவத்திற்கு அதன் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரித்தது.

 

'தங்க மயில்' மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க சிறந்த திரைப்படத்திற்கான விருதை சர்வதேச நடுவர் குழு தேர்வு செய்யும். சிறந்த படம் தவிர, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (ஆண்), சிறந்த நடிகர் (பெண்) மற்றும் சிறப்பு ஜூரி பரிசு பிரிவுகளில் வெற்றியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.

 

.எஃப்.எஃப். 54 இல், 'சர்வதேச போட்டி' என்பது திரைப்படத் தயாரிப்பில் வளர்ந்து வரும் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான வகைகளின் 15 பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தேர்வாகும். இந்த ஆண்டு, இந்த விழாவில் 105 நாடுகளில் இருந்து 2,926 பதிவுகள் வந்து சாதனை படைத்தன.

 

****** 

 

AD/SMB/KRS



(Release ID: 1980223) Visitor Counter : 74