வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய முந்திரி தினத்தன்று பங்களாதேஷ், கத்தார், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்ய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் உதவுகிறது

Posted On: 24 NOV 2023 5:24PM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் (அபெடா) ஏற்றுமதிக்கு உதவும் அமைப்பாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.  

 

தேசிய முந்திரி தினத்தை முன்னிட்டு நவம்பர் 23-ந் தேதி பங்களாதேஷ், கத்தார், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முந்திரிக் கொட்டை ஏற்றுமதியை தொடங்கி வைத்தது. ஒடிசாவில் இருந்து வங்கதேசத்திற்கு முதல் முறையாக முந்திரிப் பருப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

உலகின் முந்திரி ஏற்றுமதியில் வியட்நாமுக்கு அடுத்தபடியாக, 15 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் முந்திரிக் கொட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஜப்பான், சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி இடங்களாகும். மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை இந்தியாவில் முந்திரி உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.

 

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஆகியவை இந்திய முந்திரிக் கொட்டைகளுக்கான சிறந்த ஏற்றுமதி இடங்களாக இருப்பதால், ஜப்பான், சவுதி அரேபியா, இங்கிலாந்து, ஸ்பெயின், குவைத், கத்தார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற சர்வதேச சந்தைகளில் முந்திரிக்கான புதிய சந்தைகளை ஆராய்வதில் அபெடா பணியாற்றி வருகிறது.

 

முந்திரி சங்கம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து ஏழு மாநிலங்களில் தேசிய முந்திரி தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளை அபெடா அதன் பிராந்திய அலுவலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தது. முந்திரியின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகள், நெட்வொர்க்கிங் தளம், அறிவு பகிர்வு, தொழில்துறை போக்குகள், துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதம் போன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்த நிகழ்வில் அடங்கும்.

 

முந்திரி தொழிலைச் சேர்ந்த பங்குதாரர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வின் தொடக்கம் குறித்து, அபேடா தலைவர் திரு. அபிஷேக் தேவ், தேசிய முந்திரி தினத்தன்று பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார்.

****

 

(Release ID: 1979508)
ANU/SMB/PKV/RR/KRS



(Release ID: 1979599) Visitor Counter : 93