மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தேசிய பால் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2023 நவம்பர் 26 அன்று தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்படும்

Posted On: 24 NOV 2023 12:04PM by PIB Chennai

தேசிய பால் தினமான 2023, நவம்பர் 26 அன்று, மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்  திரு பர்ஷோத்தம் ரூபாலா கோபால் ரத்னா  விருதுகளை வழங்கவுள்ளார். 

அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இதற்கான விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய பால்வளத்துறை இணையமைச்சர் திருசஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

தேசிய கோபால் ரத்னா விருது கால்நடை மற்றும் பால்பண்ணைத் துறையில் மிக உயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றாகும். உள்நாட்டுக் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பால் பண்ணையாளர்கள் போன்றோரை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருது கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

1.    நாட்டு மாடுகள், எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர்

2.    சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம், பால் உற்பத்தியாளர் நிறுவனம், பால் பண்ணையாளர் அமைப்பு

3.    சிறந்த செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (ஏஐடி)

இந்த விருதில் முதல் இரண்டு பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்மும், மூன்றாவது பரிசாக  ரூ.2 லட்சமும் வழங்கப்படும். அத்துடன், தகுதிச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (ஏ.ஐ.டி) பிரிவில், தேசிய கோபால் ரத்னா விருதில் தகுதி சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு மட்டுமே வழங்கப்படும்.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைக் கால்நடைப் பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது.

இதில் இரண்டாவது வகையான “உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம், பால் உற்பத்தியாளர் நிறுவனம், பால் பண்ணையாளர் அமைப்பு” என்ற பிரிவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம்கோவில்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூன்றாவது இடத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

***

ANU/SMB/PLM/RS/KPG
 



(Release ID: 1979397) Visitor Counter : 94