தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'விடுதலை பாகம் -1'–ன் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர்
கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'விடுதலை பாகம் -1'ன் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினார்கள். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் திரு வெற்றிமாறன், உள்ளூர் கலாச்சாரம், மொழி, நிலத்தின் அடிப்படையில், திரைப்படங்களை உருவாக்குவதாக கூறினார்.
கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் வந்து பிறகு தளர்த்தப்பட்ட நேரத்தில் ஒரு சிறிய படம் எடுக்க விரும்பினேன் என்று கூறினார். 30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழுவினருடன் காட்டுக்குள் சென்று உலகின் பிற பகுதிகளிலிருந்து விலகி இருக்க விரும்பியதாக அவர் தெரிவித்தார். 1998-ம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற 6 பக்க சிறுகதை, தான் எழுதியவற்றில் ஒரு பகுதி மற்றும் சில ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
முன்னணி நடிகரான சூரியை பாராட்டிய அவர், "குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி சிறப்பாக நடித்துள்ளதாகவும், அவரது உண்மையான ஆளுமை அந்த பாத்திரத்துடன் ஒன்றிணைந்துள்ளதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய சூரி, சுமார் 160 படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த தாம், முதன்முறையாக கதாநாயகனாக நடிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் திரு எல்ரெட் குமார் சந்தானம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் ஆகியோரும் கலந்துரையாடினார்கள்.
**********
ANU/AD/IR/RS/KRS
(Release ID: 1978948)
Visitor Counter : 134