சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
42-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதார அமைச்சகத்தின் ஆயுஷ்மான் அரங்கை பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருது பெற்ற டாக்டர் தீபா மாலிக் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
22 NOV 2023 3:32PM by PIB Chennai
பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண்ணும், பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளைப் பெற்றவரும், இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவருமான டாக்டர் தீபா மாலிக், காசநோய் அற்ற பாரதம் இயக்கத்தின் தேசியத் தூதராக உள்ளார். அவர் இன்று 42 வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சுகாதாரத் துறையின் ஆயுஷ்மான் அரங்கை பார்வையிட்டார்.
அப்போது உரையாற்றிய அவர், 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவை மீண்டும் சுட்டிக்காட்டினார். "ஆரோக்கியமே சிறந்த செல்வம்" என்பதைக் குறிப்பிட்ட அவர், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா காசநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்கான இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நான் இந்த ஆண்டு 10 காசநோயாளிகளுக்கு உதவி செய்பவராக மாறிவிட்டேன். அவர்கள் அனைவரும் இப்போது நன்றாக உள்ளனர். காசநோயிலிருந்து குணப்படுத்தப்படுகிறார்கள்" என்று தீபா மாலிக் கூறினார்.
சிகிச்சை உடல் ரீதியாக இருந்தாலும், மீட்புக்கான முதல் முயற்சி மனநலத்துடன் தொடங்குகிறது என்றும் நேர்மறையான மனநிலையை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். காசநோய் பாதிப்பிலிருந்த தாம் மீண்டது குறித்து அவர் விவரித்தார். சரியான வழிகாட்டுதல், ஊட்டச்சத்து மற்றும் கவனிப்புடன் காசநோயைக் குணப்படுத்தலாம் என்று தீபா மாலிக் கூறினார்.
-----
ANU/PKV/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1978838)
आगंतुक पटल : 171