தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 6

54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காந்தி டாக்ஸ்' திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து

54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த்சாமி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் குறித்த  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இது தொடர்பாக கோவாவில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் ஷாரிக் படேல், ராஜேஷ் கெஜ்ரிவால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள  முதலாவது மௌனப் படம் 'காந்தி டாக்ஸ்' ஆகும். இது சிறந்த  மௌன திரைப்படங்களை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள காந்தியின் உருவப்படம், அனைவரும் உள்வாங்க விரும்பும் காந்தியின் கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இத்திரைப்படம் விளக்குகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஷாரிக் படேல் கூறுகையில், தகவல் தொடர்புக்கு காட்சி ஊடகத்தை மட்டுமே பயன்படுத்துவது என்ற இயக்குநரின் கருத்து சுவாரஸ்யமானதாகும். விஜய் சேதுபதி, அதிதி, அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோரின் நடிப்பு இப்படத்தைத் தொடர்ந்து எடுத்துச்செல்லவேண்டும் என்று தங்களுக்கு  நம்பிக்கை அளித்ததாகக் குறிப்பிட்டார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தது  கேக்கில் ஐஸ் வைத்தது போன்று இருந்ததாகவும்  அவர் தெரிவித்தார்.

இத்திரைப்படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, "நீதி என்பது யதார்த்தத்திலிருந்து வேறுபட்டது” என்று கூறினார்.

ஒரு நடிகராக வெற்றி குறித்து பேசிய அவர், "கலை வடிவம் நம்மை ஆசீர்வதிக்கும் என்றும், பார்வையாளர்களை நம்ப வைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். எந்த ஒரு சினிமாவிலும் வெற்றி, தோல்வி அபாயம் எப்போதும் உண்டு” என்று அவர் தெரிவித்தார். மௌனத் திரைப்படத்தில் நடிப்பது சிரமமாக இருந்ததா என்ற கேள்விக்கு, பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, வசனங்கள் இருப்பதால் தமது நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அது இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமும் இல்லை என்றும் கூறினார்.

***

ANU/PKV/IR/RS/KPG

iffi reel

(Release ID: 1978749) Visitor Counter : 149