தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை குறித்த பெரும் தகவல் பரப்புரை முகாம் பால்கரில் நடைபெற்றது

Posted On: 20 NOV 2023 6:20PM by PIB Chennai

பால்கர் மாவட்டம் தஹானுவில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் வளர்ச்சியடைந்த இந்தியா  சபத யாத்ரை தொடர்பான பெரிய முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பைஸ் பல்வேறு அரசு நலத் திட்டங்களின் பயன்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

கடந்த புதன்கிழமை (2023, நவம்பர் 15,) பழங்குடியினர்  கௌரவ தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்டின் குந்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வேன்கள் மகாராஷ்டிராவின் ஐந்து பழங்குடி மாவட்டங்களான பால்கர், கட்சிரோலி, நாந்தேட், நாசிக் மற்றும் நந்தூர்பார் ஆகிய பல்வேறு தாலுகாக்களில் வலம் வருகின்றன.

 

பால்கரில் நடந்த பெரிய முகாமில் பேசிய மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பைஸ், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கு வளர்ச்சியானது கிராமப்புறங்களை சென்றடைய வேண்டும். எந்தவொரு அரசின் திட்டத்தின் உண்மையான வெற்றியும் கடைசி முனையில் உள்ள நபர் அதன் நன்மைகளைப் பெறுவதில் தான் இருக்கிறது என்று அவர் கூறினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடாகவே உள்ளது என்றார் ஆளுநர். நமது நாட்டை அபிவிருத்தி செய்ய நாம் தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார். இந்த யாத்திரை எனும் மத்திய அரசின் முன்முயற்சியைப் பாராட்டிய அவர், நாட்டில் சமத்துவத்தைக் கொண்டுவர பழங்குடி சமூகம் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சி அவசியம் என்று கூறினார்.

--------------

ANU/AD/BS/RS/KRS


(Release ID: 1978329) Visitor Counter : 140