தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் அசாம் மாநிலம் முழுவதும் தீவிர உற்சாகத்துடன் நடைபெறுகிறது
Posted On:
18 NOV 2023 4:16PM by PIB Chennai
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை) என்ற மத்திய அரசுத் திட்டங்களை எடுத்துரைக்கும் மக்கள் தொடர்புப் பயணம், அசாமின் பல்வேறு இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று, (18-11-2023) இந்தப் பயணம் கர்பி ஆங்லாங்கில் உள்ள லாங்சோம்பி பகுதி, கோக்ரஜார் மாவட்டத்தின் தாவோலாப்ரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இது தவிர மற்றொரு செய்தி, கல்வி மற்றும் தகவல் (ஐ.இ.சி) வாகனம், பக்சா மாவட்டத்தில் பயணித்தது. இந்த ஐ.இ.சி வாகனங்கள், மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால முக்கியத் திட்டங்களின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குகின்றன. அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பக்சாவில் பயனாளிகளுக்கு உடனடியாக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன.
15 நவம்பர் 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தப் பயணத்தில் ஐ.இ.சி வாகனங்கள் முதல் கட்டமாக பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பயணித்து வருகின்றன. ஜனவரி 2024 வரை இந்தப் பயணம் நடைபெறுகிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயணித்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் வாகனங்கள் செல்லும்.
சுகாதார வசதிகள், நிதி சேவைகள், மின்சார இணைப்புகள், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, சுகாதாரம், துய்மையான குடிநீர், தரமான கல்வி என அனைத்தும் அரசின் திட்டங்கள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.
*****
ANU/AD/PLM/DL
(Release ID: 1977903)
Visitor Counter : 63