மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
42 வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் டிஜிட்டல் இந்தியா அரங்கு முக்கிய கவனத்தை ஈர்க்கிறது
Posted On:
17 NOV 2023 2:03PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள அறை எண் 5 இல் உள்ள டிஜிட்டல் இந்தியா அரங்கில் டிஜிட்டல் சாத்தியங்களின் எதிர்காலம் நனவாவதை நேரடியாக காணலாம். 2023 நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் 42 வது ஐ.ஐ.டி.எஃப் 2023 இன் முக்கிய கவன ஈர்ப்புகளில் ஒன்றான இந்தக் கண்காட்சியில் டிஜிலாக்கர், யுபிஐ பரிமாற்றம், இ-சஞ்சீவினி செயலி, பாஷினி மற்றும் மனதின் குரல் ஆகிய முன்னோடி முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால்) நிறுவப்பட்ட இந்த டிஜிட்டல் இந்தியா அரங்கில் ஒரு சில ஆர்வமுள்ள தலைப்புகளை விடவும் அதிநவீன தொழில்நுட்பங்களில் ஈடுபட மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.
அனைத்து வயதினரையும் ஈர்க்கக்கூடிய அனுபவங்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து நேரடியாக டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளைப் பற்றி அறியும் வாய்ப்பு இந்த அரங்கில் கிடைக்கிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை , பெண் தொழில்முனைவோர் முதல் ஆர்வமுள்ள மூத்த குடிமக்கள் வரை, இந்த அரங்கு டிஜிட்டல் அறிவுடைய புதிய இந்தியாவுக்கான புதுமையான தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறது.
யுபிஐ பரிமாற்றக் கண்காட்சியில், பார்வையாளர்கள் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதிநவீன யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம் மூலம் பார்வையாளர்களுக்கு யுபிஐ முறையில் பணம் எடுக்கும் வசதி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ குறியீடுகளைப் பயன்படுத்தி இயந்திரத்தின் திரையில் உருவாக்கப்பட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தை எடுக்கலாம்.
இந்த சமீபத்திய கட்டண சேவை ஐ.சி.சி.டபிள்யூ எனும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமல் பணம் பெறும் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டது விரைவில் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பணம் எடுக்கும் அட்டை தேவையில்லை என்பதால், இந்த முறையில் ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் போன்ற மோசடிகளை மேற்கொள்ள முடியாது.
டிஜிலாக்கர் ஒரு காகிதமில்லா சகாப்தத்திற்கு முன்னோடியாக உள்ளது. இது பிறப்பு சான்றிதழ்கள், உயில் பதிவுகள், ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான டிஜிட்டல் ஆவணங்களின் விரிவாக சேமித்து வைக்க மக்களுக்கு தடையற்ற அணுகலை வழங்குகிறது. டிஜிட்டல் ஆவண மேலாண்மையில் ஒரு புரட்சிகரமான தளமான டிஜிலாக்கர், அணுகல் மற்றும் பாதுகாப்பின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது, இவை அனைத்தும் இப்போது 200 மில்லியன் மக்களின் விரல் நுனியில் உள்ளன! இந்தப் புதுமையான தளம் நிர்வாகச் செயல்முறைகளை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் செயல்திறனை மேம்படுத்துகிறது. அதிகாரத்துவ தடைகளைக் குறைக்கிறது. டிஜிட்டல் இந்தியா அரங்கில் டிஜிலாக்கர் மைய இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1977583
****
ANU/PKV/BS/RR/KV
(Release ID: 1977597)
Visitor Counter : 105