வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகில இந்திய மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர பணவீக்க விகிதம் 2023 அக்டோபரில் 2022 அக்டோபரை விட (-) 0.52% (தற்காலிக) குறைவாக உள்ளது, இது 2023 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டதை விட (-) 0.26% குறைவாகும்

प्रविष्टि तिथि: 14 NOV 2023 12:00PM by PIB Chennai

அகில இந்திய மொத்த விலை குறியீட்டெண், எண்ணை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர பணவீக்க விகிதம் 2023 அக்டோபர் மாதத்தில் 2022 அக்டோபரை விட (-) 0.52% (தற்காலிக) குறைவாகும். இது 2023 செப்டம்பரில் (-) 0.26% குறைவாக பதிவாகியுள்ளது. 2023 அக்டோபரில் பணவீக்கத்தின் எதிர்மறை விகிதம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம், ஜவுளி, அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், காகிதம் மற்றும் காகித பொருட்கள் போன்றவற்றின் விலைகள் குறைந்ததே முக்கிய காரணமாகும்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்ணை ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) குறிப்பிட்ட மாதத்தின் இரண்டு வார கால இடைவெளியுடன் வெளியிடுகிறது, மேலும் இந்தக் குறியீட்டு எண் நாடு முழுவதும் உள்ள நிறுவன ஆதாரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது. இந்த செய்திக் குறிப்பில் அக்டோபர், 2023 (தற்காலிக), ஆகஸ்ட், 2023 (இறுதி) மற்றும் பிற மாதங்கள் / ஆண்டுகளுக்கான மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் (அடிப்படை ஆண்டு 2011-12 = 100) உள்ளது. மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்காலிகப் புள்ளிவிவரங்கள் 10 வாரங்களுக்குப் பிறகு (குறிப்பிட்ட மாதத்திலிருந்து) இறுதி செய்யப்பட்டு, பின்னர் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

 

***

ANU/SMB/BS/RR/KPG


(रिलीज़ आईडी: 1976874) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri