பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் வட இந்தியாவின் முக்கிய மின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும்: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 11 NOV 2023 6:19PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில்  தற்போது நடைபெற்று வரும் மின் திட்டங்கள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது இந்தப் பகுதி வட இந்தியாவின் முக்கிய "மின் உற்பத்தி மையமாக" உருவெடுக்கும் என்று மத்திய பணியாளர் நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மலை மாவட்டமான கிஷ்த்வாரின் படார் பகுதி மற்றும் மசூவின் தொலைதூர கிராமத்தில் உள்ள குலாப்கருக்குச் இன்று (11-11-2023) பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கிராமக் குழந்தைகளுக்கான புதிய பள்ளியை அவர் திறந்து வைத்தார். குலாப்கர் கிராமத்தில் ராணுவம் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமிலும் அவர் பங்கேற்றார். குலாப்கரில் டாக்டர்  ஜிதேந்திர சிங் மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரநிதிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்  ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதில் இருந்து 9 முதல் 10 ஆண்டுகளுக்குள் குறுகிய காலத்தில் இப்பகுதியில் 6 முதல் 7 பெரிய நீர் மின் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 1,000 மெகாவாட் திறன் கொண்ட பாகல் துல் மிகப்பெரிய திறன் கொண்ட திட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலவரப்படி, இதன் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 8,112.12 கோடியாகும் எனவும் இது 2025-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.  மற்றொரு முக்கிய திட்டம் 624 மெகாவாட் திறன் கொண்ட கிரு நீர்மின் திட்டம் என அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 4,285.59 கோடி எனவும் இதுவும் 2025-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

850 மெகாவாட் திறன் கொண்ட ராட்லே திட்டம், மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். தற்போதுள்ள துல்ஹஸ்தி முதலாவது மின் நிலையம் 390 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது என்றும், துல்ஹஸ்தி 2-ம் நீர்மின் திட்டம் 260 மெகாவாட் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டங்கள் மின் விநியோக நிலையை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், மாநிலத்திலும் அடுத்தடுத்து வந்த அரசுகள் கிஷ்த்வார் பிராந்தியத்தை புறக்கணித்தன என்று டாக்டர்  ஜிதேந்திர சிங் கூறினார். புறக்கணிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான்,உரிய கவனமும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பதார் பகுதியில் கல்லூரி வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை புறக்கணிக்கப்பட்உ வந்ததாகவும்,   2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான், மத்திய அரசின் திட்டமான ரூசா திட்டத்தின் கீழ் பதாருக்கு ஒரு கல்லூரி அனுமதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இப்பகுதியில் மேலும் பல கல்லூரிகள் மற்றும் மொபைல் டவர்கள் அமைத்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவை அனைத்தும் 2014 க்குப் பிறகுதான் நடந்தன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர்  ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

****  

PKV/PLM/DL



(Release ID: 1976419) Visitor Counter : 110