குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்.எஸ்.எம்.இ துறையில் வேலைவாய்ப்பு 15 கோடியைத் தாண்டியது, 3 கோடிக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ அலகுகள் உத்யாம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன : திரு நாராயண் ரானே

Posted On: 10 NOV 2023 3:29PM by PIB Chennai

எம்.எஸ்.எம்.இ துறை 15 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை  செய்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

99 லட்சம் முறைசாரா எம்.எஸ்.எம்.இ அலகுகள் உட்பட 3 கோடிக்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ அலகுகளை உத்யாம் போர்ட்டலில் பதிவு செய்வதன் மூலம் இந்தச் சாதனை எளிதானதாக  திரு  ரானே தெரிவித்துள்ளார். இந்த பதிவு செய்யப்பட்ட 3 கோடி எம்.எஸ்.எம்.இ.க்களில், 41 லட்சத்துக்கும் அதிகமானவை பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்களாகும்.

எம்.எஸ்.எம்.இ துறையில் பெண் தொழிலாளர்களின் சிறப்பான பங்களிப்பை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உருவாக்கப்பட்ட 15 கோடி வேலை வாய்ப்புகளில், 3.4 கோடிக்கும் அதிகமானவை பெண்களால் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இது எம்.எஸ்.எம்.இ துறையின் மூலம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குமான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த வெற்றிக்கு   பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையே காரணம் என்றும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு அசைக்க முடியாத ஆதரவு அதன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, புதிய வாழ்வாதாரங்களை உருவாக்குவது மற்றும் நாடு முழுவதும் உள்ள தனிநபர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் தீவிரமாக ஊக்குவித்து வருவதாக திரு ரானே கூறியுள்ளார்.

எம்.எஸ்.எம்.இ.க்களின் உறுதி மற்றும் அர்ப்பணிப்புக்கு இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை ஒரு சான்றாகும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முன்முயற்சிகள் எம்.எஸ்.எம்.இ துறையை மேலும் வலுப்படுத்தும், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1976131)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 1976243) Visitor Counter : 55