பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பரந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் உத்தியின் பூர்வமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது

Posted On: 10 NOV 2023 3:26PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 நவம்பர் 10 அன்று புதுதில்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இரு அமைச்சர்களும் பரந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் உத்தி பூர்வமான பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். பாதுகாப்புத் தொழில்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்புத் துறைகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புக் கருவிகளை உருவாக்குவதிலும், இணை உற்பத்தி செய்வதிலும் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

 

முக்கியமான துறைகளில் கூட்டு ஆராய்ச்சியுடன் தங்கள் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பான இண்டஸ்-எக்ஸ் முன்னேற்றத்தை அவர்கள் ய்வு செய்தனர். இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள், வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான உத்திபூர்வமான தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

பஹ்ரைனை தலைமையிடமாகக் கொண்ட பலதரப்பு கட்டமைப்பான ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் முழு உறுப்பினராக உயர்த்துவதற்கான இந்தியாவின் முடிவை அமைச்சர் ஆஸ்டின் வரவேற்றார்.

 

போரின்போது காணாமல் போனவர்கள் கணக்கு முகமைப் பணியின் ஒரு பகுதியாக அசாமில் மீட்கப்பட்ட சில பொருட்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அமெரிக்க அமைச்சர் ஆஸ்டினிடம் ஒப்படைத்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த அமெரிக்கப் படைகளின் பாராசூட், சீருடை மற்றும் விமானத்தின் பாகங்கள் இதில் அடங்கும். அமைச்சர்கள் தங்கள் சந்திப்பை முடிப்பதற்கு முன், தங்கள் குழுக்களுக்கான எதிர்கால கூட்டுப் பணிக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கினர் .

 

***

ANU/SMB/BS/RS/KRS

(Release ID: 1976128)


(Release ID: 1976242) Visitor Counter : 101