வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நாகாலாந்தின் பசுமை சந்தைகள் தூய்மை தீபாவளியைக் கொண்டாடுகின்றன
Posted On:
10 NOV 2023 12:25PM by PIB Chennai
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் 'தூய்மை தீபாவளி சுப தீபாவளி' இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாகாலாந்தும் மற்ற மாநிலங்களைப் போலவே, இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. தனிப்பட்ட வீடுகளுக்கு அப்பால், தீபாவளியின் போது தூய்மையின் உணர்வு முழு சமூகத்திற்கும் விரிவடைகிறது, கூட்டு முயற்சிகளால் சந்தைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையை உறுதி செய்கிறது, இது ஒரு பண்டிகை சூழலை வளர்க்கிறது. இதற்கு ஏற்ப, நாகாலாந்தில் உள்ள துயன்சாங் நகர மன்றம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது, இது சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளிக்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இந்தச் சிந்தனை அணுகுமுறை சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்குப் பங்களிப்பது மட்டுமல்லாமல், நிலையான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகைப் பருவத்திற்கான பகிரப்பட்ட பொறுப்பையும் ஊக்குவிக்கிறது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சியில், நாகாலாந்தின் சந்தைகள் 'உங்கள் சொந்த பையைக் கொண்டு வாருங்கள்' என்ற கருத்தை ஆதரிக்கின்றன. இந்த நடவடிக்கை பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதையும் சுற்றுச்சூழல் பொறுப்பின் கலாச்சாரத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, அன்றாட வாழ்க்கையில் நிலையான நடைமுறைகளுக்கு தனிப்பட்ட பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கும் சில்லறை நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதற்கும் சமூகத்தால் உந்தப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
மெட்ஸிபெமா நகர மன்றம் 'ஆர்.ஆர்.ஆர் என்னும் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் திட்டத்தை ஊக்கத்தொகையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சி ஆர்.ஆர்.ஆர் வசதியைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கிறது, கழிவுகளைப் பிரிப்பதையும் கழிவுகளை செல்வமாக மாற்றும் கருத்தையும் ஊக்குவிக்கிறது. அதிகபட்ச பங்கேற்பை உருவாக்க, நகரம் தங்கள் கழிவுகளை நியமிக்கப்பட்ட மையங்களுக்கு கொண்டு வருபவர்களுக்கு கூப்பன்களை வழங்குகிறது, நாகாலாந்தில் உள்ள திமாபூர் நகராட்சி மன்றம், சுமுகெடிமா நகர மன்றம் ஆகியவை ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் உடன் இணைந்து இப்பகுதியில் சிறப்பாக செயல்படும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பரிசுக் கூப்பன்களை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1976077
***
ANU/SMB/PKV/AG/KV
(Release ID: 1976133)
Visitor Counter : 94