குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அவசரநிலைப் பிரகடனம் நமது வரலாற்றின் இருண்ட காலம்: குடியரசு துணைத்தலைவர்
Posted On:
09 NOV 2023 5:10PM by PIB Chennai
நமது மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்று குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று கூறியுள்ளார். அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டதை "வரலாற்றில் இருண்ட காலம்" என்று வர்ணித்த அவர், அந்தக் காலகட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் அனைவரும் முன்னேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கோவா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய திரு தன்கர், ஆளுநரின் முக்கியப் பங்கினை எடுத்துரைத்தார். அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற ஆளுநரின் உறுதிமொழியை குறிப்பிட்ட அவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் அதே வேளையில், அனைவரும் அரசியலமைப்பிற்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதில் ஆளுநரின் பொறுப்பை அவர் சுட்டிக் காட்டினார்.
பரபரப்பான வாழ்க்கை முறைகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் தேடுவதற்கான வழியை வழங்கும் வகையில், சரியான நேரத்தில் இந்தப் புத்தக வெளியீடு வருகிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்த புத்தகம் "இயற்கையுடன் இணைவதற்கு அமைதியான இடத்தை" உருவாக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். போன்சாய் என்பது சீனா மற்றும் ஜப்பானுடன் தொடர்புடையது என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இந்தியாவில் தோன்றிய ஒரு கலை வடிவம் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் திரு பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் பி.டி.உஷா, ஞானபீட விருது பெற்ற திரு தாமோதர் மௌசோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
***
ANU/SMB/IR/AG/KRS
(Release ID: 1975962)
Visitor Counter : 96