எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர் கேசிங் தலைமையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மின்சக்தி, புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு
Posted On:
08 NOV 2023 3:44PM by PIB Chennai
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு 2023 நவம்பர் 06, 07 ஆகிய நாட்களில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் மின்துறை செயலாளர், மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள், மின்துறை அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் என்டிசி (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்) மற்றும் புதிய ஆர்பிஓ (புதுப்பிக்கத்தக்க கொள்முதல் நடைமுறைகள்), பிரதமரின் கேயுஎஸ்யு எம் திட்டம், மேற்கூரை சூரியசக்தி திட்டம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், சூரியப் பூங்காக்கள், பசுமை எரிசக்தி வழித்தடங்கள், பிஎல்ஐ திட்டம், காற்றாலை ஆற்றல் மற்றும் பசுமை திறந்த அணுகல் விதிகள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஆர்.டி.எஸ்.எஸ் (புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறைத் திட்டம்), மின் பகிர்மானக் கழகங்களின் செயல்திறன் மேம்பாடு, மின் தேவை மற்றும் திறன் கூட்டுதல், நீரேற்று சேமிப்புத் திட்டங்கள் (பி.எஸ்.பி), தேசிய மின் தொடரமைப்புத் திட்டம் ஆகியவற்றை மறுஆய்வு செய்தல், மின்சார நுகர்வோர் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல், கார்பன் சந்தை, எரிசக்தி மாற்றம், மின்-இயக்கத்தில் மாநிலங்களின் பங்கு மற்றும் தெரு விளக்குகளில் இ.இ.எஸ்.எல் நிலுவைத் தொகை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு விஷயத்திலும் மாநிலங்கள் தங்கள் உள்ளீடுகளையும் ஆலோசனைகளையும் வழங்கின.
மாநாட்டின்போது விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
அனைத்து மாநிலங்களும் பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
எதிர்கால திறன் கூட்டலுக்கான திட்டம்.
ஏப்ரல் '24 முதல் ஜூன்' 24 வரை அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய போதுமான நிலக்கரி கையிருப்பை பராமரிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின்சாரத் தேவை 250 ஜிகாவாட் வரை உயரக்கூடும். எனவே மாநிலங்கள் போதுமான நிலக்கரி இருப்பை உறுதிசெய்து, கையிருப்பை உருவாக்க இந்தக் காலத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் உள்ளிட்ட பிற உள்நாட்டு ஆதாரங்கள் விநியோகத்தை அதிகரித்திருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் மின் தேவை அதிகரித்ததால் இது போதுமானதாக நிரூபிக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும்.
மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020- ன் அமலாக்கத்தை மறுஆய்வு செய்யும் போது, நுகர்வோருக்கு தரமான விநியோகம் மற்றும் சேவையின் தரத்தை உறுதி செய்யவும், மின் பகிர்மான கழகங்கள் விதிகளுக்கு இணங்காவிட்டால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநிலங்கள் முழுவதும் தானியங்கி மற்றும் சீரான இழப்பீட்டு பொறிமுறையை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான நேரத்தைக் குறைக்கவும், மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் கிடைக்கவும் மாநிலங்கள் செயல்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணத்தை தவறாமல் நிர்ணயிப்பதே முதல் தேவையான படியாகும். அதாவது நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் தொடக்கத்தில் அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இரண்டாவதாக, கட்டணம் செலவைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். மாநிலங்கள் என்ன மானியம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் மானியத்தை செலுத்த வேண்டும்.
அனைத்து அரசுத் துறைகளும் ப்ரீபெய்ட் முறையில் வைக்கப்பட வேண்டும், இதன் மூலம் அரசுத் துறைகளிலிருந்து பணம் தானாகவே செலுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் கூறினார். ***
ANU/PKV/IR/RS/KPG
(Release ID: 1975657)
Visitor Counter : 120