இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தூய்மை இயக்கத்தை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடனான சிறப்பு பிரச்சாரம் 3.0 இல் விளையாட்டுத் துறை வெற்றிகரமாக பங்கேற்றது.
Posted On:
07 NOV 2023 4:55PM by PIB Chennai
இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ), தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் (என்.எஸ்.யு), தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) மற்றும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் (என்.டி.டி.எல்) உள்ளிட்ட அமைப்புகளுடன் விளையாட்டுத் துறை 02.10.2023 அன்று தொடங்கி 31.10.2023 அன்று நிறைவடைந்த சிறப்பு பிரச்சாரம் 3.0 இல் வெற்றிகரமாக பங்கேற்றது.
சிறப்பு முகாம் 3.0-ன் முடிவில், விளையாட்டுத் துறை நிலுவையில் உள்ள 29 நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகள், 27 மக்கள் குறைகள் மற்றும் 02 மாநில அரசு குறிப்புகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இந்த இயக்கத்தின் முன்னேற்றம் துறையின் மூத்த அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பிரச்சாரத்தின் ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து 200 இயல் கோப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு 200 களையெடுக்கப்பட்டுள்ளன. பிரச்சாரத்தின் ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து 400 மின் கோப்புகளும் பிரச்சார காலத்தில் (31.10.2023 நிலவரப்படி) மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையின் கீழ் உள்ள பல்வேறு கள அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் அடையாளம் காணப்பட்ட 43 இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, 8,725 சதுர அடி இடத்தை இத்துறை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட பல இடங்கள் பயன்பாட்டு பகுதிகளாக மாற்றுவதன் மூலம் ஆதாயமாக பயன்படுத்தப்பட்டன. மேலும், பிரச்சாரத்தின் போது குப்பைகளை அகற்றியதன் மூலம் ரூ.65,114/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
********
ANU/AD/PKV/KRS
(Release ID: 1975504)
Visitor Counter : 89