உள்துறை அமைச்சகம்

ஹரியானா அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டுக் கர்னாலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அந்த்யோதயா மகாசம்மேளன்' நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Posted On: 02 NOV 2023 5:07PM by PIB Chennai

ஹரியானா அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டுக் கர்னாலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அந்த்யோதயா மகாசம்மேளன்' நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

இன்று 5 மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்று முதல்வர் தீர்த்த யாத்ரா திட்டம்  என்றும்  உள்துறை அமைச்சர் கூறினார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கான பூமி பூஜையை நடத்திய  பிரதமர் திரு. நரேந்திர மோடி,  2024, ஜனவரி 22  அன்று ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டையையும் செய்யவிருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், ஹரியானா மக்கள் முதலில் தங்கள் குடும்பத்தின் பெரியவர்களை  தீர்த்த யாத்திரை திட்டத்தின் கீழ் ராம் லல்லாவின் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், திரு மனோகர் லால் தலைமையிலான ஹரியானா அரசும் கடந்த 9 ஆண்டுகளில் நாட்டையும் ஹரியானாவையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை என்று திரு அமித் ஷா கூறினார். வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை நரேந்திர மோடி அரசிடமிருந்தும் ஹரியானாவின் மனோகர் லால் அரசிடமிருந்தும் எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 

இன்றைய அந்த்யோதயா மகாசம்மேளன்  பொருத்தமானது. ஏனெனில் திரு நரேந்திர மோடிதிரு மனோகர் லால் ஆகியோரின் இரட்டை என்ஜின்  அரசுகள் ஹரியானாவில் 45 லட்சம் மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்காகப் பணியாற்றியுள்ளது  என்று அவர் கூறினார். 20 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.6,000 செலுத்துவதன் மூலம் விவசாயிகளின் நலனுக்காக நரேந்திர மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ .4500 கோடியை வழங்கியுள்ளது.என்று அவர் தெரிவித்தார்.

 

நரேந்திர மோடி அரசு ஹரியானாவில் 7.5 லட்சத்துக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டியுள்ளதாகவும், 1.2 கோடி மக்களுக்கு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கியுள்ளதாகவும், மாநிலத்தில் 28,000 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 லட்சம் எரிவாயு இணைப்புகளை வழங்குவதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவை புகை இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளார் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

 

 இந்திய இராணுவத்தில் உள்ள ஒவ்வொரு பத்தாவது வீரரும் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்றும், ஹரியானா அரசு அதிகபட்ச எண்ணிக்கையிலான பயிர்களை அதாவது 14 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) வாங்குகிறது என்றும் அவர் கூறினார். நாட்டின்  உணவு தானிய உற்பத்தியில் ஹரியானா  இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பல பணிகள் செய்யப்பட்திருப்பதை திரு அமித் ஷா பட்டியலிட்டார்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துள்ளார். நாட்டின் படைகளை நவீனமயமாக்கியுள்ளார். எல்லைகளில் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நமது படைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் ஹரியானா உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து துணிச்சலான ராணுவ வீரர்களையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கௌரவித்துள்ளதாக திரு  அமித் ஷா தெரிவித்தார்.

***** 

ANU/PKV/SMB/KRS



(Release ID: 1974235) Visitor Counter : 92