அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 3.0 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 02 NOV 2023 11:11AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணியிலிருந்து உத்வேகம் பெற்று, தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் அரசில் நிலுவையில் உள்ளவற்றைக் குறைப்பதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2023, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 3.0 (செயலாக்க கட்டம்) ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த இயக்கம் துறைக்குள்ளும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அதன் பிரிவுகள் /  தன்னாட்சி அமைப்புகள் / சார்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் நடத்தப்பட்டது.தூய்மை மற்றும் விண்வெளி மேலாண்மைக்குத் தயாராக வேண்டிய இலக்குகளை அடையாளம் காண்பதற்கான ஆயத்த கட்டத்துடன் இந்த இயக்கம் 2023, செப்டம்பர் 15 தொடங்கியது.

தூய்மை செய்வதற்காக சுமார் 150 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 8,000 க்கும் அதிகமான  நேரடிக் கோப்புகள், சுமார் 140 மின் கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. தினசரி முன்னேற்றம் ஒரு சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வழங்கப்படும் இணையப்பக்கத்தில் தகவல்கள் பதிவேற்றப்பட்டன.

இணைச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி ஏ.தனலட்சுமி நேர்முக/மெய்நிகர் கூட்டங்கள் மூலம் இயக்க  முன்னேற்றத்தைத் தீவிரமாக ஆய்வு செய்தார். சிறப்பு இயக்கம் 3.0 இன் ஒரு பகுதியாக அலுவலக வளாகத்திற்குள் பல இடங்களைப் பார்வையிட்டார். அதிகாரிகளின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், பணியிடத்தில் தூய்மையைப் பராமரிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவித்தார்.

இத்துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.என்.எஸ்.டி) அதன் வளாகத்தில் சேதமடைந்தவற்றைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி  வளாகத்தில் பொது நடைப்பயிற்சி பாதை அமைத்தது.

இந்த ஆண்டு 37 ஆயிரம் சதுர அடி பரப்பளவு விடுவிக்கப்பட்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரடி  மற்றும் மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் ரூ.8.33 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 8,214 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 3066 கோப்புகள் அகற்றப்பட்டன. 140 மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 130 மின்-கோப்புகள் மூடப்பட்டன.

*****

ANU/PKV/SMB/KV


(Release ID: 1974072) Visitor Counter : 95