கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனரக தொழில்துறை அமைச்சகம், சிறப்பு தூய்மை பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், கழிவுகளை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.4.66 கோடி வருவாயை ஈட்டியுள்ளது

Posted On: 01 NOV 2023 9:13AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், நிலுவையில் உள்ள விஷயங்களைக் குறைப்பதற்கும் கனரகத் தொழில்கள் அமைச்சகம்  அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை மூன்றாவது கட்ட சிறப்பு தூய்மைப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

கனரக தொழில்துறை அமைச்சகம், தூய்மை குறித்த அதன் சிறப்பு பிரச்சாரம் 3.0 வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அமைச்சகத்திற்குள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்டது. செப்டம்பர் 15, 2023 முதல், சுத்தம் செய்ய மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை அடையாளம் காண்பதற்கான ஆயத்தப் பணிகளுடன் இந்த பிரச்சாரம் தொடங்கியது.

பிரச்சாரத்தின் போது, இட மேலாண்மை மற்றும் அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவு விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது மற்றும் 76,600 க்கும் மேற்பட்ட இயல் கோப்புகள் மறுஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன.  தினசரி முன்னேற்றம் ஒரு பிரத்யேக குழுவால் கண்காணிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வழங்கப்படும் எஸ்.சி.பி.டி.எம் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அமைச்சகத்தின் செயலாளர் திரு கம்ரான் ரிஸ்வி,     சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டார். அதிகாரிகளின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், பணியிடத்தில் தூய்மையைப் பராமரிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

தூய்மையுடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் இந்தப் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று 781 பிரச்சார தளங்களில் தூய்மை திருவிழாவைக் கொண்டாடின. இந்த ஆண்டு குப்பைகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திய பின்னர், 21 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது 78,155 இயல் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 21,256 கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன. 41,776 மின்னணு கோப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. குப்பைகளை அகற்றியதன் மூலம் ரூ.4.66 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.

---

ANU/PKV/BR/KPG


(Release ID: 1973662) Visitor Counter : 136