அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொழில்நுட்ப வல்லுநர்கள் குடிமைப் பணிகளுக்கு மதிப்பு சேர்த்து மேம்படுத்த முடியும்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 29 OCT 2023 6:59PM by PIB Chennai

குடிமைப் பணிகளை நிறைவேற்றுவதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்புகளைக் கூட்டி அவற்றை மேம்படுத்த முடியும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார், தில்லி இந்திய தொழில் நுட்ப கழகத்தின் (ஐஐடி) முன்னாள் மாணவர்கள் பொது சேவை தின விழாவில் இன்று (29-10-2023) அவர் உரையாற்றினார்.

 

 

தொழில்நுட்ப வல்லுநர்களின் கல்விப் பின்னணியும் அவர்களின் நிபுணத்துவமும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசால் தொடங்கப்பட்ட பல முதன்மைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற உதவும் என்று அவர் தெரிவித்தார்குறிப்பாக ஸ்வாமித்வா, விரைவு சக்தி பெருந்திட்டம், நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டம், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான முக அங்கீகார தொழில்நுட்பம் போன்றவை தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

 

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இப்போது புதுமையான தொழில்நுட்பங்களில் உலகை வழிநடத்துகிறது என்று அவர் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற நிலையை அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது என்றார்.

 

 

மின்சார வாகனங்கள், காற்றாலை மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் முதலாவது ஹைட்ரஜன் பேருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டெண், 2022 இல் இந்தியா 81 வது இடத்திலிருந்த நிலையில் தற்போது அது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்கொவிட் பெருந்தொற்றின் போது, இந்தியா தனது சொந்த மக்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் உலகிற்கும் உதவியது என்றும் உலகின் முதல் டி.என். தடுப்பூசியையும் இந்தியா வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை முதன்முதலில் கண்டறிந்தது நமது சந்திரயான்தான் என்று அவர் கூறினார். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கான ஆதித்யா-எல்1 திட்டம் ஒரு பெண் இயக்குநரால் வழிநடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்

 

 

இந்தியாவால் வழிநடத்தப்பட உலகம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். .நா-வால் சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பது நமது முயற்சிகளின் வெற்றிக்குச் சான்றாகும் என அவர் குறிப்பிட்டார்இந்தியர்களாகிய நாம் அனைவரும் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

 

 

..டி பொறியாளர்களின் பங்கு இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக உள்ளது என அவர் கூறினார். அவர்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர்களாகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும் சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், சொந்த புத்தொழில் நிறுவனங்கள் மூலம் தொழில்முனைவோராக மாறி வேலை வழங்குபவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர் என திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

Release ID: 1972852

 

AD/PLM/KRS

 

<><><><><>



(Release ID: 1972864) Visitor Counter : 97