அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா 6 ஜி தரப்படுத்துதலில் முன்னிலை வகிக்க முடியும் என்பதுடன் இத்தகைய தொழில்நுட்பங்களின் உலகளாவிய ஏற்றுமதியாளராகவும் மாற முடியும்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் திரு அபய் கரண்டிகர்

Posted On: 29 OCT 2023 5:11PM by PIB Chennai

இந்தியா அதன் உள்நாட்டு 5 ஜி தொழில்நுட்பத்தில் அர்ப்பணிப்புமிக்க வல்லுநர் குழுவைக் கொண்டுள்ளது என்றும் மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் நாட்டை வலுவான நிலைக்கு கொண்டு வருவதற்கான சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது எனவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் திரு அபய் கரண்டிகர் கூறியுள்ளார்.

 

 

புதுதில்லியில் அக்டோபர் 27 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட .எம்.சி எனப்படும் இந்திய மொபைல் கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக 6 ஜி தரப்படுத்தல் குறித்த இரண்டாவது சர்வதேச பயிலரங்கம் இன்று (29-10-2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைச் செயலாளர், 6 ஜி தரநிலைப்படுத்தலை இதுவரை சிந்திக்காத வகையில் வழிநடத்தவும், வரும் ஆண்டுகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்களின் உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறவும் இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

 

 

5 ஜி என்பது 2 ஜி மற்றும் 3 ஜி மொபைல் நெட்வொர்க்குகளிலிருந்து ஒரு முன்னுதாரண மாற்றமாகும் என்று அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் 6 ஜி உண்மையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். 6 ஜி ஆராய்ச்சி மற்றும் தரப்படுத்தலில் மிகவும் மாறுபட்ட வழியில் செல்வாக்கு செலுத்துவதற்கான வளமான பயன்பாட்டு சூழ்நிலையை இந்தியா கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

 

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செயலாளர் திரு வி. ரகுநந்தன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பல்வேறு அமர்வுகளில் கலந்து கொண்டு மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பங்கள், அவற்றின் தரப்படுத்தல், அவற்றின் எதிர்காலம் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் குறித்து உரையாற்றினர்.

 

Release ID: 1972821

 

PKV/PLM/KRS



(Release ID: 1972846) Visitor Counter : 92