வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானில் நடைபெற்ற ஜி 7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்; மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பு

Posted On: 28 OCT 2023 3:24PM by PIB Chennai

ஜப்பானின் ஒசாகா நகரில் இன்று நடைபெற்ற ஜி-7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்.

திரு கோயல் விநியோகச் சங்கிலி மீள்திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துரைத்தார். இந்த பிரச்சினையில் பல ஆலோசனைகளை வழங்கினார்.

கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் புவி-அரசியல் நிகழ்வுகள் தற்போதுள்ள விநியோகச் சங்கிலிகளின் பாதிப்புகள், பொருட்களின் விலைகள் மற்றும் உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதில் முன்னிலை வகித்தன.

பொது-தனியார் பங்களிப்பு, முக்கியமான உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலிகளின் புதுமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தேவை ஆகியவற்றை அமைச்சர் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்துதல் மற்றும் பணியாளர்களின் திறன் மற்றும் மறுதிறன் ஆகியவற்றின் அவசியத்தை திரு கோயல் எடுத்துரைத்தார்.

விநியோகச் சங்கிலிகளின் இயக்கத்தை எளிதாக்குவதற்கும், எல்லை கடந்த  வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பில் ஒத்துழைக்குமாறு அவர் அரசுகளை வலியுறுத்தினார். ஜி 20 இன் புது தில்லி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜி.வி.சி.களின் வரைபடத்திற்கான பொதுவான கட்டமைப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. நிஷிமுரா யசுடோஷி, இங்கிலாந்தின் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சர்  திருமதி கெமி படெனோச், ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. டான் ஃபாரெல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி திருமதி கேத்தரின் டாய், ஜெர்மனியின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அமைச்சர்  திரு உடோ பிலிப் ஆகியோரை திரு கோயல் சந்தித்துப் பேசினார். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், வரி அல்லாத தடைகளை நீக்குதல், போன்ற முக்கிய பிரச்சினைகள் இந்தச் சந்திப்புகளின் போது விவாதிக்கப்பட்டன.       

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1972561) Visitor Counter : 131