தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகர்தலா, ஆக்ரா, திருச்சி உள்ளிட்ட பதினேழு இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை இயக்கம் குறித்த அறிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது.

Posted On: 25 OCT 2023 3:47PM by PIB Chennai

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், அகர்தலா, ஆக்ரா, அவுரங்காபாத், பாவ்நகர், போபால், குவஹாத்தி-போங்கைகான், ஹிசார், ஜெய்ப்பூர், ஓங்கோல், பாலக்காடு, ராஞ்சி-கும்லா, சங்காரெட்டி, திருச்சி, ஆக்ரா-பரேலி எச்.டபிள்யூ, பாவ்நகர்-ராஜுலா எச்.டபிள்யூ, போபால்- ஜபல்பூர் எச்.டபிள்யூ மற்றும் ஹிசார்-ரோதக் ஆகிய பதினேழு நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சோதனை இயக்கத்தை நடத்தியது.

 

குரல் மற்றும் தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் செல்லுலார் / மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பிட இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

 

குரல் சேவைக்கு: கவரேஜ்; அழைப்பு அமைவு வெற்றி விகிதம்; டிராப் கால் விகிதம்; பிளாக் அழைப்பு விகிதம், ஒப்படைப்பு வெற்றி விகிதம்;

 தரவு சேவைகளுக்கு: பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம், வலை உலாவல் தாமதம், வீடியோ ஸ்ட்ரீமிங் தாமதம்.

 

முழுமையான அறிக்கை www.analytics.trai.gov.in டிராய் இணையதளத்தில் கிடைக்கும்.

 

*******

 

AD/SMB/KRS


(Release ID: 1970982) Visitor Counter : 126