பாதுகாப்பு அமைச்சகம்
லோனாவாலாவில் உள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் என்.சி.சியின் கடற்படை பிரிவு வீரர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் அகில இந்திய நவ் சைனிக் முகாம் நிறைவு
Posted On:
25 OCT 2023 1:05PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள 17 இயக்குநரகங்களைச் சேர்ந்த இந்தியாவின் சிறந்த இளம் வீரர்களுக்கு இடையிலான வருடாந்திர 10 நாள் போட்டியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அகில இந்திய நவ் சைனிக் முகாம் 2023 (ஏ.ஐ.என்.எஸ்.சி 2023) லோனாவாலாவில் உள்ள புகழ்பெற்ற கடற்படைத் தளமான ஐ.என்.எஸ் சிவாஜியில் நிறைவடைந்தது. இம்முறை, இந்த முகாம் மகாராஷ்டிரா தேசிய மாணவர் படை (என்.சி.சி) இயக்குநரகத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
என்.சி.சி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி, "ஏ.ஐ.என்.எஸ்.சி 2023 இல் வீரர்களின் சாதனை குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். இந்த நிகழ்வு, நமது இளம் வீரர்களின் அபாரமான திறமையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களிடையே உள்ள உத்வேகத்தையும் வலுப்படுத்துகிறது. தலைமையகம், தெற்கு கடற்படைத் தலைமை மற்றும் ஐ.என்.எஸ் சிவாஜி இந்த முகாமிற்கு வழங்கிய ஆதரவும், வளங்களும் தேசத்தைக் கட்டமைப்பதில் அவற்றின் உண்மையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன”, என்று கூறினார்.
இந்த ஆண்டு போட்டிகளில் வீரர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பலவிதமான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் பயிலரங்குகளுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கு சவால் விடும் பல செயல்பாடுகளும் இருந்தன. இந்த ஆண்டு நடந்த போட்டியில் மகாராஷ்டிரா இயக்குநரகம் முதலிடத்தையும், ஆந்திரா மற்றும் தெலங்கானா இயக்குநரகம் இரண்டாமிடமும் பிடித்தன.
***
ANU/PKV/BR/KRS
(Release ID: 1970771)
Visitor Counter : 105