பாதுகாப்பு அமைச்சகம்
தூய்மை இயக்கம் 3.0 – பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை
प्रविष्टि तिथि:
23 OCT 2023 3:06PM by PIB Chennai
பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை தற்போது சிறப்பு இயக்கம் 3.0ஐ செயல்படுத்தி வருகிறது. இது பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அலுவலகங்களில் தூய்மை நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கும், தாமதங்களைக் குறைப்பதற்கும் குறிப்பாக கவனம் செலுத்துகிறது. இந்த தூய்மை இயக்கம் 3.0 நாடு தழுவிய தூய்மையை பராமரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது . சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக , மூன்றாவது வாரம் வரை, துறைக்குள் உள்ள அமைப்புகள் இதுவரை 746 தூய்மை இயக்கங்களை நடத்தியுள்ளன. இந்த முயற்சிகள் பல்வேறு சமூக ஊடக தளங்களிலும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன . மேலும், நிலுவையில் உள்ள பணிகளை குறைக்கும் வகையில், இத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இயக்கத்தின் 3-வது வாரத்தின் முடிவில், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை பின்வரும் பணிகளை மேற்கொண்டுள்ளது:
- மதிப்பாய்வு செய்யப்பட்ட 21000 கோப்புகள் / பதிவுகள் மற்றும் கழிப்பதற்காக பிரிக்கப்பட்ட கோப்புகள்
- கழிவுகள் / பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம் 7.5 லட்சம் சதுர அடி, இடம் விடுவிக்கப்பட்டது.
- 2700 மெட்ரிக் டன் பழைய / பயன்படுத்தப்படாத பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன
- கழிவுகளை அகற்றியதன் மூலம் ஈட்டிய 20 கோடி வருவாய்
- 153 பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு
- 52 பொது மக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு
***
ANU/AD/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1970164)
आगंतुक पटल : 149