குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
23 OCT 2023 3:27PM by PIB Chennai
தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது செய்தியின் முழு விவரம்:–
நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தசரா பண்டிகையின் இந்த நன்னாளில் எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தசரா பண்டிகை தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், தீமையின் மீதான நல்லொழுக்கத்தின் வெற்றியையும் குறிக்கிறது. நீதியின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும், உண்மை, நீதி, இரக்கம், துணிச்சல் ஆகியவற்றின் மதிப்புகளை உள்வாங்கி போற்றவும் இது ஒரு தருணமாகும்.
இந்தப் பண்டிகை நம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும் .
***
ANU/AD/IR/RS/KPG
(Release ID: 1970123)
Visitor Counter : 127