மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கேரள மாநிலம் கொச்சியில் மீன்வள விழிப்புணர்வு இயக்கம் வரும் 23ஆம் தேதி தொடங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
21 OCT 2023 2:14PM by PIB Chennai
கொச்சியில் உள்ள தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (நிஃப்பாட்) வரும் 23 ஆம் தேதியன்று மீன்வள விழிப்புணர்வு இயக்கம் குறித்த பயிலரங்கை மீன்வளத் துறையின் உள்நாட்டு மீன்வளம் மற்றும் நிர்வாகத்தின் இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா தொடங்கி வைக்கிறார்.
பயிலரங்கில், கேரள அரசின் மீன்வளத் துறையின் மத்திய மண்டல இணை இயக்குநர் திரு. எஸ். மகேஷ், கேரளாவில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விளக்கமளிப்பார்.
நீர்வாழ் உயிரின வளர்ப்பு இணை இயக்குநர் ஓய்வு பெற்ற எம்.பி.இ.டி.ஏ மற்றும் என்.எஃப்.டி.பி ஆலோசகர் திரு எம்.ஷாஜி கேரளாவில் பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ், நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பங்கள் - அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான முறைகள் குறித்து உரையாற்றுவார்.
கொச்சி சி.ஐ.எஃப்.டி.யின் க்யூ.ஏ.எம் பிரிவின் தலைவரும் முதன்மை விஞ்ஞானியுமான டாக்டர் சைனுதீன், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் குறித்தும், ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர்களில் சி.ஐ.எஃப்.டி.யின் முன்முயற்சிகள் குறித்தும் விளக்க உள்ளார்.
பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம் தொடர்பாக மதிப்புக் கூட்டல் மற்றும் திறன் மேம்பாட்டில் நிஃப்பாட் தலையீட்டை செயலாக்க தொழில்நுட்ப வல்லுநர் திரு கமல்ராஜ் முன்வைக்கிறார்.
கேரள மீன்வளத் துறையின் பயிற்சி துணை இயக்குநர் திருமதி மஜா ஜோஸ் பங்கெடுப்பாளர்களுடன் கலந்துரையாடலை வழிநடத்துவார், மேலும் பங்கெடுப்பாளர்கள் தங்கள் வெற்றிக் கதைகளை நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொள்வார்கள்.
மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்கள் நிஃப்பாட்டில் நடைபெறும் எம்.எஸ்.ஜே.ஏ பயிலரங்கின் போது கலந்துரையாடல்களில் பங்கேற்பார்கள்.
பின்னணி;
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை உணவு உற்பத்தி, ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாகும். 2.8 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை இந்த நம்பிக்கைக்குரிய துறை வழங்குகிறது.
பிரச்சினைகளைக் களைந்து தீர்வுகளை அமுல்படுத்துவதற்கு மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் ஏனைய தரப்பினரின் நாடித்துடிப்பைப் புரிந்துகொள்வது இன்றியமையாததாகும். எனவே, தொடர்ந்து அடிமட்ட அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்வது, துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் வெற்றிக்கு ஒரு திருப்புமுனையாகும்.
***
ANU/PKV/BS/DL
(रिलीज़ आईडी: 1969705)
आगंतुक पटल : 143