பிரதமர் அலுவலகம்
மிஷன் ககன்யான் டிவி டி1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2023 12:56PM by PIB Chennai
மிஷன் ககன்யான் டிவி டி 1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இது தேசத்தை ஒரு படி மேலே முன்னெடுத்துச் செல்கிறது என்று அவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யானை நனவாக்க இந்த ஏவுதல் நம்மை ஒரு படி நெருக்கமாக முன்னெடுத்துச் செல்கிறது. இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்."
***
ANU/PKV/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1969676)
வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam