பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளமான ராணுவ கலாச்சாரத்தின் கொண்டாட்டம்; முதலாவது ராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 21 OCT 2023 12:08PM by PIB Chennai

இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் முதல் பதிப்பை புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான ராணுவ கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை இந்த இரண்டு நாள் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் முதன்மையாக புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும்.

இந்த நிகழ்வின் போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால ராணுவ களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான 'புராஜெக்ட் உத்பவ்' திட்டத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைகளின் தலைவர், முதல் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கடந்த சில தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் விலைமதிப்பற்ற பங்கை வெளிப்படுத்தும் இந்திய ராணுவ பாரம்பரிய விழா, நாட்டின் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். இந்திய ராணுவம் மற்றும் அவர்களின் துணிச்சலான செயல்களைப் பற்றி மேலும் அறிய இது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ராணுவ பாரம்பரிய விழா

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் மகிமை வாய்ந்த  ராணுவ வரலாறு மற்றும் கலாச்சாரம் இருந்தபோதிலும், அதன் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. 21 ஆம் நூற்றாண்டில் ஆயுதப்படைகளை அபிவிருத்தி செய்வதற்கான இலக்குகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அதன் தாக்கத்தின் மூலம்  ராணுவ வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் பொது ஈடுபாட்டின் களத்தில் ஒரு அளவுகோலை உருவாக்க இந்த விழாமுயல்கிறது.

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1969674) Visitor Counter : 100