நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகத்தின் முற்போக்கான கொள்கைகள் தனியார் துறைக்கு சுரங்கங்களை விரைவாக ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கிறது
Posted On:
20 OCT 2023 2:57PM by PIB Chennai
2014 ஆம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் ஏலம் விடப்படுகின்றன.
நாட்டின் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடனும், 2020 ஆம் ஆண்டில் வணிக சுரங்கங்களுக்கான நன்கு பரிசீலிக்கப்பட்ட மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், வணிக நிலக்கரி சுரங்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும், விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் வெளியுறவுத் துறைச் செயலாளர் உள்ளிட்ட செயலாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவில், சட்ட விவகாரங்கள் துறை செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர், நிலக்கரித் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அரசு நிர்ணயித்தக் குழு, 9 கூட்டங்களை நடத்தியுள்ளது. அதில் 27 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குழு எடுத்த முடிவுகள் ஆணையத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிக நேரம் எடுக்கக்கூடிய பிரச்சினைகளில் விரைவாகவும் நன்கு பரிசீலிக்கப்பட்டும் முடிவெடுக்க இந்த நடைமுறை உதவியுள்ளது.
வணிக ரீதியான நிலக்கரி சுரங்க ஏலம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வணிக சுரங்கத்தின் முதல் ஏலத்திற்குப் பிறகு, வணிக நிலக்கரி சுரங்கத்தின் கீழ் ஏழு தவணைகளில் மூன்று ஆண்டு குறுகிய காலத்தில் மொத்தம் 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த 91 நிலக்கரி சுரங்கங்களில், ஒன்பது சுரங்கங்கள் அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளன, ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. 2023 நிதியாண்டில் வணிக சுரங்கங்களிலிருந்து 7.2 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தைத் தொடங்குவதன் நோக்கம், தொழிற்சாலைகளின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதே தவிர, வருவாயை அதிகரிப்பது அல்ல. இதன் நோக்கம் நிலக்கரியில் இந்தியாவைத் தற்சார்பு நிலைய அடையச் செய்வதாகும்.
***
ANU/SMB/BS/RS/KPG
(Release ID: 1969515)
Visitor Counter : 131