சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்
प्रविष्टि तिथि:
20 OCT 2023 12:46PM by PIB Chennai
புதுதில்லி, சிஜிஓ வளாகத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் அந்த்யோதயா பவனில் அமைச்சகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, தூய்மைப் பணியில் பங்கேற்றார்.
அன்றாட வாழ்க்கையில் சிறந்த தூய்மை நடைமுறைகளைப் பின்பற்ற அமைச்சக ஊழியர்களை ஊக்குவித்தார். சிறப்பு தூய்மைத் இயக்கம் 3.0-ல் அதிக பங்கேற்பை வலியுறுத்தினார்.
14.09.2023 நிலவரப்படி நிலுவையில் இருந்த 317 பொதுமக்கள் குறைகள் மற்றும் 63 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
(ii) சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0-ன் போது தூய்மைப் பணிக்காக அடையாளம் காணப்பட்ட நான்கு இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(iii) 1400 சதுர அடியில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன.
சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பிற அலுவலகங்களிலும் சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0- மேற்கொள்ளப்பட்டு வருகிறது
***
ANU/SMB/BS/RS/KPG
(रिलीज़ आईडी: 1969365)
आगंतुक पटल : 169