பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை அக்டோபர் 19-ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 18 OCT 2023 11:04AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 19, 2023 அன்று மாலை 4:30 மணியளவில்  காணொலிக் காட்சி  மூலம், மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களைத் திறந்து வைக்கிறார். இவை, மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்படுகின்றன.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக,  கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை  வழங்கும். ஒவ்வொரு  மையமும் குறைந்தது இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தொழில் பங்குதாரர்கள்  மற்றும் முகவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையங்களை நிறுவுவதால்,  மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் திறமையான மனிதவளத்தை வளர்ப்பதில் இப்பகுதி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும்.”

***

ANU/PKV/BR/AG


(रिलीज़ आईडी: 1968662) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam