சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு இயக்கம் 3.0 முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது

Posted On: 17 OCT 2023 2:50PM by PIB Chennai

உள்நாட்டு சுற்றுலா அலுவலகங்கள், ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் போன்றவற்றில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0-சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இது 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. இதன் முக்கிய பகுதி 2023 அக்டோபர் 2 அன்று தொடங்கியுள்ள நிலையில் அது அக்டோபர் 31 வரை நீடிக்கும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், தூய்மை இயக்கம், கோப்புகளை ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கால கட்டத்தில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதை அடைவதற்கான முயற்சிகள் சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயக்கத்தின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு, இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சகத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகள்,  அலுவலகங்கள் ஆகியவை இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றன.

ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர் சுற்றுலா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இணைந்து சுற்றுலாத் தலங்களில் தூய்மை இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக சமூக ஊடக தளங்களில் தகவல்கள் பதிவிடப்படுகின்றன.

 

***

PS/ANU/PLM/RS/KPG



(Release ID: 1968400) Visitor Counter : 99