கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 17 அன்று மிகப்பெரிய கடல்சார் நிகழ்வான “உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு -2023”- ஐ தொடங்கி வைக்கிறார்

மத்திய கப்பல் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு 2023 அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறும் இந்த நிகழ்வு மும்பை பிகேசி-யில் எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் நடைபெறுகிறது

மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இணை அமைச்சர்கள் திரு ஸ்ரீபாத் நாயக், திரு சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்

திருமதி நிர்மலா சீதாராமன், திரு பியூஷ் கோயல், திரு நிதின் கட்கரி, திரு நாராயண் ரானே, டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு தர்மேந்திர பிரதான், திருமதி மீனாட்சி லேகி, திரு அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்டோர் மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்

தொடக்க அமர்வில் 12 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

Posted On: 16 OCT 2023 6:13PM by PIB Chennai

மும்பையில் உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 (ஜி.எம்.ஐ.எஸ் 2023)-ன் மூன்றாவது பதிப்பை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி 17.10.2023 அன்று  தொடங்கி வைக்கிறார். இந்த மிகப்பெரிய கடல்சார் நிகழ்வை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த உச்சிமாநாடு கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும். எதிர்கால துறைமுகங்கள் குறித்த அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இதில் இடம்பெறும். கப்பல் கட்டுதல்; பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி, கடல்சார் குழுமங்கள்; கடல் சார் துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுலா போன்றவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இணை அமைச்சர்கள் திரு ஸ்ரீபாத் நாயக், திரு சாந்தனு தாக்கூர்  உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 16 மாநில அமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த அமர்வில் ஆர்மீனியா, பங்களாதேஷ், பெலாரஸ், கொமோரோஸ், ஈரான், இத்தாலி, இலங்கை, தான்சானியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் நேபாளம் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும்  பங்கேற்க உள்ளனர்.

இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய கடல்சார் சமூகத்திற்கும் ஒரு மைல்கல் நிகழ்வாகும். இதில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள், உலக அளவில் கடல்சார் கொள்கைகள் மற்றும் உத்திகளில்  கணிசமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு அமர்வுகளில்  பெலாரஸ், பெல்ஜியம், பூடான், டென்மார்க், பிரான்ஸ், ஈரான், இத்தாலி, நெதர்லாந்து, ரஷ்யா, சவுதி அரேபியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், நார்வே, மெக்சிகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 115 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

இந்த உச்சிமாநாடு இந்திய கடல்சார் நீல பொருளாதாரத்திற்கான 25 ஆண்டு கால செயல்திட்டமான அமிர்த கால தொலைநோக்குப்பார்வை 2047- வெளியிடுவதற்கான தளமாக செயல்படும்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 81 சர்வதேச கடல்சார் நிபுணர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிள் பங்கேற்கும், இந்த உச்சிமாநாடு தொழில் நிபுணத்துவத்தின் மையமாக அமையும். 31 முன்னணி உலகளாவிய கடல்சார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பதிவு செய் பிரதிநிதிகள் பல்வேறு விவாதங்களில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 7.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்பட உள்ளன. மேலும் இந்த உச்சி மாநாட்டில் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 86 முதலீட்டு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

150 கண்காட்சியாளர்களைக் கொண்ட ஒரு விரிவான கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப விவாதங்கள், மாநில அமர்வுகள் மற்றும் சர்வதேச வட்ட மேசை அமர்வுகள் உள்ளிட்ட 31 அமர்வுகளைக் கொண்டதாக இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. விரிவான மாநாட்டு அட்டவணை கடல்சார் தொழில்துறையின் எதிர்காலம் குறித்த ஆழமான நுண்ணறிவை வழங்கும்.

 

புதுப்பிப்புகளுக்கு, பார்வையிடவும்:

 

maritimeindiasummit.com/

https://twitter.com/shipmin_india/media

https://www.facebook.com/ShipminIndia/

https://in.linkedin.com/company/ministry-of-ports-shipping-and-waterways-india

https://www.youtube.com/@MinistryOfPortsShipping_GOI

https://www.instagram.com/shipmin_india/?hl=en

https://twitter.com/GMIS2023

https://www.facebook.com/GMIS2023/

https://www.youtube.com/@GMIS2023

https://www.linkedin.com/company/gmis2023/

https://www.instagram.com/gmis2023_/

* * *

 

 

 (Release ID: 1968229) Visitor Counter : 110