எரிசக்தி அமைச்சகம்

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் மின்சார வாகனங்கள குறித்த தரவுகளுக்கான தகவல் பலகையை அறிமுகப்படுத்தினார்

Posted On: 16 OCT 2023 4:58PM by PIB Chennai

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங், மின்சார வாகனங்கள் தொடர்பான இணைய தள டிஜிட்டல் பலகையான evreadindia.org என்ற தளத்தை புதுதில்லியில் இன்று (16.10.2023) தொடங்கி வைத்தார். தொழில் துறை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட இந்த தகவல் பலகை கட்டணமில்லா டிஜிட்டல் தளமாகும்.  இது தற்போதையை மின்சார வாகன பயன்பாடு, முன்னறிவிப்புகள், பேட்டரி தேவை, சார்ஜிங் நடைமுறைகள் மற்றும் சந்தை வளர்ச்சி தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இந்தத் தகவல் பலகை தொழில்துறை, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

2022 ஆம் ஆண்டில் 6,90,550 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும் 2030 ஆம் ஆண்டில் இது ஒரு கோடியே 39 லட்சமாக உயரும் எனவும்ஈவி-ரெடி இந்தியா (evreadindia)  தகவல் பலகை கணித்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் ஒரு கையேடு வெளியிடப்பட்டுள்ளது; நிகழ்ச்சியில் பேசிய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்எதிர்காலம் மின்சார மயமானதாக இருக்கும் என்றும், இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

இந்தியா மின்சார வாகனப் போக்குவரத்திற்கு மாறுவது மிகவும் அவசியம் என்று திரு  ஆர் கே சிங் கூறினார். நாடு 5-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 3-வது  பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு எரிசக்தி சுதந்திரம் முக்கியமானது என்று அவர் கூறினார். கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்க போக்குவரத்தை மாசுபாடு இல்லாத முறைக்கு மாற்றுவது முற்றிலும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

கரியமிலவாயு வெளியேற்றத்தில் போக்குவரத்து 18 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இதைக் குறைக்க அரசு மின்சார வாகனங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான நோக்கம் என அவர் தெரிவித்தார். மின்சார வாகனங்களைப் பற்றி பரவலாக  பேசத் தொடங்குவதற்கு முன்பே, 2018ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்திலேயே மின்சார வாகனங்களில் மின்னேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசு https://evyatra.beeindia.gov.in/ என்ற  தகவல் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இதில்  மின்னேற்ற நிலையங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என்றும்  அமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்தார்.

***

(Release ID: 1968137)

SMB/ANU/PLM/RS/KRS



(Release ID: 1968209) Visitor Counter : 132