சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில் வெள்ளைக் குச்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
16 OCT 2023 1:56PM by PIB Chennai
மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் உள்ளடக்கியத் தன்மையை ஊக்குவிக்கவும், பார்வையற்றோர் தொடர்பான நடத்தை விதிகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் உலக வெள்ளைக் குச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு, வெள்ளைப் பிரம்புடன் கூடிய சுதந்திரம், அதன் மூலமான செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையாக உள்ளது. மக்களிடையே வெள்ளைக் குச்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை, நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், காணொலிக் கருத்தரங்குகள், நேர்காணல்கள், பேரணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
********
SMB/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1968077)
आगंतुक पटल : 180