நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் முதலாவது பி20 உச்சி மாநாடு நிறைவடைந்தது
Posted On:
14 OCT 2023 7:12PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமையின் கீழ் முதல் ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் பி20 உச்சி மாநாடு இன்று புதுதில்லி துவாரகாவில் உள்ள யஷோபூமி இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தில் நிறைவு பெற்றது.
ஜி20 செயல்முறைக்கு பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள பாராளுமன்ற பங்களிப்பை வழங்க கூட்டுப் பணியைத் தொடரவும். 13ம் தேதியன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பி20 உச்சிமாநாட்டின் ஒன்பதாவது பதிப்பின் நிறைவு அமர்வில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நிறைவுரை ஆற்றினார்.
மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ்; நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தலைவர், திரு. டுவார்டே பச்சேகோ; ஜி20 நாடுகளின் பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் நிறைவு அமர்வில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 12ம் தேதியன்று மிஷன் லைஃப் குறித்த ஜி20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் நடைபெற்றது.
மேலும், விவரங்களுக்கு ஆங்கில இந்த செய்திக்குறிப்பை காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1967742
***
ANU/AD/BS/DL
(Release ID: 1967759)
Visitor Counter : 131