சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதில் ஒப்பந்தப் பிரச்சனைகளுக்கான இயக்கத்தை மேற்கொள்கிறது
Posted On:
14 OCT 2023 4:08PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானக் கூட்டமைப்பினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உயர்நிலைக் கூட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி நடத்தினார். தகுதியான அனைத்து உரிமைகோரல்களுக்கும் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு 2 திட்டத்தை இயக்க முறையில் செயல்படுத்த இக்கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அனைத்து ஒப்பந்ததாரர்களும் தங்கள் உரிமைகோரல்களை 2023, அக்டோபர் 25ம் தேதிக்குள் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மத்திய நிதி அமைச்சக செலவினத் துறையின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு (ஒப்பந்த தகராறுகள்) திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தீர்வுத் தொகையைப் பெறுவதற்கு விரிவான நடைமுறை / வழிமுறைகள் உள்ளன. உரிமைகோரல் தொகை ரூ.500 கோடி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், வழிகாட்டுதல்களுக்கு இணங்க கோரிக்கை இருந்தால், கொள்முதல் நிறுவனங்கள் உரிமைகோரலை ஏற்றுக்கொள்ள வேண்டும். உரிமைகோரல் ரூ.500 கோடிக்கு மேல் இருந்தால், ஒப்பந்ததாரரிடமிருந்து தீர்வுக்கான கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்ற முடிவை உரிய அதிகாரியின் ஒப்புதலுடன் காரணங்களைப் பதிவு செய்த பின்னர் 31.10.2023 க்குள் ஜி.இ.எம் போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தீர்க்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு அனுராக் ஜெயின் கூறினார். முடக்கப்பட்ட செயல்பாட்டு மூலதனத்தை விடுவிக்கவும், புதிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
***
ANU/AD/SMB/DL
(Release ID: 1967702)
Visitor Counter : 98