வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "பிரதமரின் விரைவு சக்தி தொகுப்பு" வெளியீடு
Posted On:
14 OCT 2023 12:30PM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி எனும் பன்முக இணைப்புக்கான தேசிய திட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் நேற்று "பிரதமரின் விரைவு சக்தி தொகுப்பை" வெளியிட்டார்.
நாடு முழுவதும் பிரதமரின் விரைவு சக்தியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதனால் விளைந்த நன்மைகளை வெளிப்படுத்தும் சில சிறந்த அம்சங்களை இந்த தொகுப்பு கொண்டுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. சோம் பிரகாஷ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் சிறப்புச் செயலாளர் (தளவாடங்கள்) திருமதி சுமிதா தவ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரதமரின் விரைவு சக்தி எனும் பன்முக இணைப்புக்கான தேசிய திட்டத்தின் கீழ் 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான அதிவேக நெடுஞ்சாலைகளைத் திட்டமிடுவதில் முக்கிய பங்கு வகித்தது.
2022-23 ஆம் ஆண்டில் புதிய ரயில் பாதைகளுக்கான ஆய்வுகளில் 400 க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் 13,500 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் திட்டமிடப்பட்டன.
இந்த தொகுப்பில், எட்டு முன்மாதிரியான திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் அதன் விளைவாக ஏற்பட்ட நன்மைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
***
ANU/AD/BS/DL
(Release ID: 1967643)
Visitor Counter : 128