அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தில்லி மருந்து உற்பத்தி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் “பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கேந்திரங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல்” தொடர்பான சிந்தனை அமர்வு 2023, அக்டோபர் 13 அன்று தொடங்குகிறது

Posted On: 12 OCT 2023 11:21AM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தொழிற்சாலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்துகிறது. உயர் வணிக மதிப்பு கொண்ட அதிநவீன உலகளாவிய போட்டித் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ஆய்வக அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் விரைவான வணிகமயமாக்கலை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பப் பரிமாற்றத் திறன்களை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தொழில்நுட்பத் தீவிர ஏற்றுமதியின் பங்கை அதிகரிக்கவும் தொழில்துறை அலகுகளுக்கு ஆதரவளிக்கிறது.

 

நாடு முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் புரிந்துணர்வு அறிவியல் மற்றும் தொழில்  ஆராய்ச்சித்துறை 2014-ஆம் ஆண்டு முதல் பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களை அமல்படுத்தியது.  இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அருகில் உள்ள பொது நிதி நிறுவனங்களில், பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களை செயல்படுத்தி வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் நிறுவப்பட்ட 18  பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள், சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

 

 

*****


(Release ID: 1966917)

 

ANU/SMB/IR/KPG/KRS

 


(Release ID: 1967106) Visitor Counter : 99