அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆரின் 82-வது நிறுவன தினக் கொண்டாட்டம்
Posted On:
11 OCT 2023 12:29PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) 82-வது நிறுவன தினத்தை தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ( சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) அதன் வளாகத்தில் 10-ம் தேதி கொண்டாடியது. இந்தியாவின் சூரியசக்தி நாயகர் என்று போற்றப்படுபவரும், எரிசக்தி சுயராஜ்ய இயக்கத்தின் நிறுவனரும், மும்பை ஐ.ஐ.டி.யின் பேராசிரியருமான சேத்தன் சிங் சோலங்கி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தங்கள் சாதனைகளைக் கூட்டாக வெளிப்படுத்தின. நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களின் பங்கு மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கு அவை எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை ரஞ்சனா அகர்வால் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து நிறுவன தின சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி உரையாற்றினார். பருவநிலை மாற்றம் மற்றும் திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆறு அம்சப் புரிதல் என்ற தலைப்பில், எரிசக்தி சேமிப்பு குறித்து விரிவாக விளக்கினார். எரிசக்தியைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதே, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன என்று அவர் கூறினார். எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான தனது யோசனையும் அவர் தெரிவித்தார், நாம் தேவையில்லாமல் பயன்படுத்தும் எரிசக்தி பயன்பாட்டைத் தவிர்ப்பது மற்றும் ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், மூன்றில் ஒரு பங்கு எரிசக்தியைச் சேமிக்கமுடியும் என்று அவர் கூறினார்.
அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் கொள்கைத் துறையின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் முதல் அரையாண்டு அறிக்கை (2021-2023) நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. டாக்டர் சுகன்யா தத்தா எழுதிய 'வருடாந்திர பயணம்: இடப்பெயர்வின் மாயாஜாலம்' என்ற மற்றொரு வெளியீடும் இதில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்., நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களும் பாராட்டப்பட்டனர்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் இனிமையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
***
ANU/SMB/PKV/AG/KPG
(Release ID: 1966617)
Visitor Counter : 124