நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் தீவிர பங்கேற்புடன் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்பு இயக்கம் 3.0 முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
Posted On:
10 OCT 2023 1:35PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் அதன் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கள அலுவலகங்களுடன் இணைந்து 2023 அக்டோபர் 02 முதல் 31 வரை தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 3.0 -ஐ கடைப்பிடிக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகள் அக்டோபர் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந் நடவடிக்கைகள் 2023 அக்டோபர் 31-ம் தேதி வரை தொடரும். பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், தூய்மை இயக்கம், குப்பைகளை அகற்றுதல், கோப்புகளில் இருந்து தேவையில்லாதவற்றைப் பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மை தொடர்பான பிற நடவடிக்கைகள் இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.
நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் கூடுதல் செயலாளர் நிலையில் ஆயத்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும், அனைத்துப் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இயக்கம் 3.0-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் இலக்குகளை அடைவதற்கும் உத்திகளை வகுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்துப் பங்குதாரர்களையும் தயார்படுத்துவது இதன் நோக்கமாகும்.
நிலக்கரி அமைச்சகம் தூய்மை இயக்கத்திற்காக 763 இடங்களை அடையாளம் கண்டுள்ளது, சிறந்த பதிவு மேலாண்மைக்காக 129,301 நேரடி கோப்புகள் மற்றும் 59,213 மின் கோப்புகளை மறுஆய்வு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தம் 5218 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற அடையாளம் கண்டுள்ளது.
***
SMB/ANU/IR/RS/KV
(Release ID: 1966273)
Visitor Counter : 108