குடியரசுத் தலைவர் செயலகம்
நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
09 OCT 2023 1:25PM by PIB Chennai
சி.ஜி.ஐ.ஏ.ஆர் அமைப்பின் பாலின சம விளைவுகளுக்கான சான்று மற்றும் புதிய வழிகளை உருவாக்கும் (ஜெண்டர்) தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர் ) நடத்தும் 'வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை: நியாயமான மற்றும் நெகிழ்வான வேளாண் உணவு முறைகளை நோக்கி' என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டைத் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் இன்று (09.10.2023) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், பாலின நீதி என்று வரும்போது, பழமையான அறிவியல் என்று அழைக்கப்படும் விவசாயம் நவீன காலத்திலும் விரும்பப்படுவதைக் காணலாம் என்று கூறினார். கொவிட் -19 பெரும்தொற்று, விவசாய உணவு முறைகளுக்கும் சமூகத்தில் கட்டமைப்பு சமத்துவமின்மைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். புலம்பெயர்தலைத் தூண்டிய இந்தத் தொற்றுநோயால் பெண்கள் அதிக வேலை இழப்பை சந்தித்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
உலகளாவிய மட்டத்தில், பெண்கள் நீண்ட காலமாக விவசாய உணவு முறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம் என்று அவர் கூறினார் . விவசாயக் கட்டமைப்பின் மிகக் குறைந்த பகுதியில் தான் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஆனால் முடிவெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்று அவர் கூறினார். உலகெங்கிலும், அவர்கள் பாரபட்சமான சமூக விதிமுறைகளால் அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். விவசாய உணவு அமைப்புகளின் முழு தொடரிலும் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது என்றும், இந்தச் சூழல் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில், சட்டங்கள் மூலம் பெண்கள் அதிக அதிகாரம் பெறுவதை நாம் காண்கிறோம் என்று அவர் கூறினார்.
பெண்கள் மேம்பாடு மட்டுமல்லாமல், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியும் நமக்குத் தேவை என்று அவர் தெரிவித்தார். நமது விவசாய உணவு முறைகளை மிகவும் நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமமானதாகவும் மாற்றுவது இந்தப் புவிக்கும், மனிதகுலத்தின் நல்வாழ்விற்கும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்றும், அதை எதிர்த்து விரைவாக செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், உயிரினங்களின் அழிவு ஆகியவை உணவு உற்பத்தியை சீர்குலைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் வேளாண் உணவு முறைகள் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலக்குகளை அடைய செயல்பாட்டுக்கேற்ற ஆராய்ச்சி தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார் . வேளாண் உணவு முறைகளை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த முறையான புரிதல் நமக்குத் தேவை என்று அவர் மேலும் கூறினார். அடுத்த நான்கு நாட்களில் இந்த மாநாடு அனைத்து, பிரச்சினைகளையும் விவாதிக்கும் என்றும், வேளாண் உணவு முறைகளில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
--------------
SMB/ANU/PLM/RS/KPG
(Release ID: 1966021)
Visitor Counter : 119