அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது; டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 08 OCT 2023 1:49PM by PIB Chennai

நோயாளிகள் பராமரிப்பில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களுடன் மருத்துவ மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள  வேண்டும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கேட்டுக்கொண்டார்.

பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 63 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

குறிப்பாக இளம் மருத்துவ வல்லுநர்களிடம் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டை வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங்,, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நோய்த்தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றார்.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நோய்த்தடுப்பு சுகாதாரத்தை வழங்க என்ஏஎம்எஸ் மற்றும் அரசாங்கம் போன்ற தொழில்முறை மருத்துவ அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மருத்துவ சேவையில் கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவை செலவு குறைந்த மருத்துவ இடமாக மாற்றியுள்ளது, 2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து கொண்டு வந்த பல முன்னோடி சுகாதார சீர்திருத்தங்கள் மற்றும் சாத்தியமான ஏற்பாடுகள் காரணமாக இது சாத்தியமானது என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் திரு. ஜிதேந்திர சிங் கூறினார்.

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1965743) Visitor Counter : 132