நித்தி ஆயோக்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த நிதி ஆயோக் மாநிலப் பயிலரங்கம்; கோவாவில் அமோக வெற்றி!

Posted On: 07 OCT 2023 8:26AM by PIB Chennai

தொழில் முனைவோர் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை செயல்படுத்துவதற்கான மகளிர் தொழில்முனைவோர் மேடை - நிதி ஆயோக் மாநில பட்டறை தொடரின் தொடக்க பதிப்பு  கடந்த 3 ஆம் தேதி கோவாவில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய கடலியல் நிறுவனத்தின் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டின் மேற்கு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு கோவா மாநில  அரசுடன் இணைந்து இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் பெண் தொழில்முனைவோர், உள்ளூர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுமங்கள், அரசு அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின்  பிரதிநிதிகள் மற்றும் பலர் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவா மாநில முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத் மற்றும் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.பி.வி.ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், நிதி ஆயோக்கின் உதவியுடன் கோவா மாநில தொலைநோக்குத் திட்டம் 2047 தயாரிக்கப்படும் என்று கூறினார்.

நிகழ்வில் பேசிய நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், வேலைவாய்ப்பு-கல்வி விகிதத்தை பராமரித்தல், பெண்கள் தொழில் முனைவை ஊக்குவித்தல் மற்றும் தொழிலாளர்களை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று முக்கிய முன்னுரிமைகளை  வலியுறுத்தினார்.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

***

ANU/PKV/BS/DL



(Release ID: 1965363) Visitor Counter : 113