நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
அக்டோபர் 13-ம் தேதி புதுதில்லியில் 9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி-20) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
Posted On:
06 OCT 2023 5:33PM by PIB Chennai
9வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு 2023 அக்டோபர் 13 முதல் 14 வரை புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் புதிதாக கட்டப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும். இந்த மாநாட்டை அக்டோபர்13-ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
ஜி-20 நாடுகளைத் தவிர, 10 பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் என்றும், இதுவரை, 26 தலைவர்கள், 10 துணைத் தலைவர்கள், 01 குழுத் தலைவர் மற்றும் ஐ.பி.யு தலைவர் உட்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 14 செயலாளர் ஜெனரல்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பான் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தின் தலைவர் இந்தியாவில் நடைபெறும் பி-20 உச்சிமாநாட்டில் முதல் முறையாக பங்கேற்கிறார் என்று திரு பிர்லா மேலும் கூறினார்.
12 அக்டோபர் 2023 அன்று உச்சிமாநாட்டிற்கு முன்னர் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) குறித்த நாடாளுமன்ற மன்றம் ஏற்பாடு செய்யப்படும். 20 அக்டோபர் 2022 அன்று குஜராத்தின் கெவாடியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரால் லைஃப் தொடங்கப்பட்டது.
இந்த மாநாட்டின் போது, இந்தியாவின் பண்டைய மற்றும் பங்கேற்பு ஜனநாயக மரபுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் 'ஜனநாயகத்தின் தாய்' என்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
ANU/PKV/BS/AG/KRS
(Release ID: 1965116)
Visitor Counter : 193