எரிசக்தி அமைச்சகம்
54இசி பத்திர முதலீட்டாளர்களுக்கான 'சுகம் ஆர்இசி' என்ற மொபைல் பயன்பாட்டை ஆர்இசி அறிமுகப்படுத்தியுள்ளது
Posted On:
06 OCT 2023 11:17AM by PIB Chennai
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி, 54 இ.சி மூலதன ஆதாய வரி விலக்கு பத்திரங்களில், தற்போதைய மற்றும் எதிர்கால முதலீட்டாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'சுகம் ஆர்.இ.சி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் செயலி, முதலீட்டாளர்களுக்கு 54 இ.சி பத்திரங்களில் முதலீடு குறித்த முழு விவரங்களையும் ஆர்.இ.சி வழங்கும்.
முதலீட்டாளர்கள் தங்கள் மின்-பத்திர சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து, புதிய முதலீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் KYC புதுப்பித்தல் தொடர்பான முக்கியமான படிவங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தொலைபேசி அழைப்பு / மின்னஞ்சல் / வாட்ஸ்அப் வழியாக ஆர்இசியின் முதலீட்டாளர் செல் உடன் இதனை இணைக்க முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த மொபைல் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயன்பாட்டின் விரைவான மற்றும் எளிதான பதிவிறக்கத்திற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆண்ட்ராய்டு:https://play.google.com/store/apps/details?id=com.rec.org
ஐஓஎஸ்:https://apps.apple.com/in/app/sugam-rec/id6468639853
ஆர்.இ.சியின் பல டிஜிட்டல் முன்முயற்சிகளில் 'சுகம் ஆர்.இ.சி'யும் ஒன்றாகும்.
பிரிவு 54இசி பத்திரங்கள் என்றால் என்ன?
பிரிவு 54 இசி பத்திரங்கள் என்பது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54 இசியின் கீழ் முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாயங்களின் கீழ் வரி விலக்கு அளிக்கும் ஒரு வகை நிலையான வருமான நிதி சாதனங்கள் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1964906
***
ANU/PKV/AG
(Release ID: 1964942)