வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முதலீடுகளுக்கான இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் 11 வது கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஹமீது பின் சையத் அல் நஹ்யான் இருவரும் கூட்டாக தலைமை தாங்கவுள்ளனர்
Posted On:
04 OCT 2023 5:06PM by PIB Chennai
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையிலான தூதுக்குழு, 2023 அக்டோபர் 5 முதல் 6 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறது. 11 வது இந்திய-ஐக்கிய அரபு அமீரக உயர் மட்ட முதலீட்டு பணிக்குழுவின் (எச்.எல்.டி.எஃப்.ஐ) இணைத் தலைவராகவும் அவர் உள்ளார். அபுதாபி அமீரகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஷேக் ஹமீத் பின் சயீத் அல் நஹ்யான் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுக்குழுவுடன் கலந்துரையாடவும் 2023 அக்டோபர் 5 முதல் 6 வரை பயணம் மேற்கொள்கிறது.
இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான பிரச்சினைகள் / சவால்கள் குறித்து இரு தூதுக்குழுக்களும் விவாதிக்கும்.
கூட்டுப் பணிக்குழுவின் பணியின் மூலம் இன்றுவரை அடைந்துள்ள விளைவுகளையும் இந்த கூட்டம் மறுஆய்வு செய்யும், மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளுடன் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் முதலீட்டை எளிதாக்குவதற்கான வழிகளை இரு தரப்பினரும் தொடர்ந்து ஆராய்வார்கள்.
இரண்டு நாள் பயணத்தின் போது, பொது வர்த்தகம், முதலீட்டு விஷயங்கள் மற்றும் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புத் துறைகளை மேம்படுத்துவதற்கான இருதரப்பு சந்திப்புகளையும் அமைச்சர் கோயல் நடத்துவார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மன்றமாக கூட்டுப் பணிக்குழு 2013 இல் நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக எச்.எல்.டி.எஃப்.ஐ இரு தரப்பிலிருந்தும் நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய தடைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறந்த தளமாக உருவெடுத்துள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையெழுத்திடப்பட்ட ஒரு ஆண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு இது முதல் சந்திப்பாகும்.
***
(Release ID: 1964177)
AD/ANU/PKV/KRS
(Release ID: 1964346)
Visitor Counter : 110